கிரிக்கெட்டிற்கு பிறகு ராணுவ சேவை
கிரிக்கெட்டிலிருந்து விலகிய பிறகு தான் "நிச்சயம்" ராணுவத்திற்கு சேவை புரிய விருப்பம் கொண்டுள்ளேன் என்று கூறினார் இந்திய கேப்டன் மகேந்திர சிங் தோனி.
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி, இன்று ஜம்மு-காஷ்மீர் எல்லைப் பகுதியில் உள்ள மிகப்பெரிய படைப் பிரிவான சியாச்சினுக்கு சென்றார்.
"நான் எப்படி அங்கு செல்ல முடிந்தது என்றால், கிரிக்கெட்தான் காரணம். எனது கிரிக்கெட் வாழ்க்கையிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு, நான் ராணுவத்தில்தான் சேவை செய்ய விரும்புகிறேன் என்று கூறினார்"
தோனி கடந்த வருடம் ராணுவத்தின் சிறப்பு லெப்டினென்ட் கலோனலாக பாராசூட் படைப் பிரிவுக்குச் சென்று பார்வையிட்டார்.
தோனி நாளை உதாம்பூரில் உள்ள வடக்குப்பிரிவு ராணுவ தலைமைச் செயலகத்திற்கு வருகை தருகிறார். பிறகு ஸ்ரீனகர் செல்கிறார். அங்கிருந்து லே மற்றும் சியாச்சன் முகாமுக்கும் செல்கிறார் தோனி.
மேலும் பாரமுல்லா மாவட்டத்தில் நாளை நடைபெறும் காஷ்மீர் பிரிமியர் லீக் இறுதிப் போட்டியையும் காண்கிறார் தோனி.
"நான் முதலில் ராணுவத்தின் முதல் முனைக்குச் செல்லவிரும்புகிறேன், ராணுவ அதிகாரிகள் அங்கு சந்திக்கும் சவால்களை நேரில் பார்க்க விரும்புகிறேன். நான் ராணுவத்க்தை தூரத்திலிருந்துதான் பார்த்திருக்கிறேன், இப்போது நெருக்கமாக பார்க்க வாய்ப்பு கிடைத்தது.
தோனி அப்பகுதியில் பணியாற்றும் ராணுவ அதிகாரிகளின் குடும்பத்தினருடன் அளவளாவ உள்ளார்.
இந்திய, பாகிஸ்தான் கிரிக்கெட் பற்றி தோனி கூறுகையில், "இதனைத் துவங்குவது முக்கியம், ஏனெனில் விளையாட்டு ஒன்றுதான் தடுப்பணைகளை உடைக்கக்கூடியது. நான் அங்கு சென்று விளையாடவேண்டும், வாரியங்கள்தான் இது பற்றி விரைவில் ஒரு முடிவெடுக்க வேண்டும்" என்றார் தோனி.

No comments:
Post a Comment